Categories
மாநில செய்திகள்

பத்து நாட்கள் அரசு விடுமுறை… மேற்கு வங்க அரசு அறிவிப்பு… காரணம் என்ன…?

மேற்குவங்க மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் துர்கா பூஜை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக தலைநகர் கொல்கத்தா மற்றும் நகரத்தின் பல பகுதிகளில் பந்தல்கள் அமைக்கப்பட்ட துர்க்கை அம்மன் சிலைக்கு பல வழிபாடுகள் செய்யப்படுகின்றது. கடந்த இரண்டு வருடங்களும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மேற்கு வங்கத்தில் துர்கா பூஜா நடைபெறவில்லை. இரண்டு வருடங்களுக்குப் பின் இந்த வருடம் நடைபெற இருப்பதினால் துர்கா பூஜையை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என அரசு முடிவு எடுத்து இருக்கின்றது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நேதாஜி உல்விளையாட்டு அரங்கில் துர்கா பூஜைக்கு மேற்கொள்ள  வேண்டிய ஏற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றி குழு உறுப்பினருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அதாவது துர்கா பூஜை செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரைக்கும் நடைபெற இருக்கின்றது. மேலும் இந்த பத்து நாட்களுக்கும் அரசு விடுமுறை என முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ள கடந்த வருடம் துர்கா பூஜைக்காக கமிட்டிகளுக்கு 500 நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த வருடம் துர்கா பூஜை ஏற்பாட்டு குழுக்களுக்கான மானியம் 60,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மேற்கு வங்கத்தில் நடைபெறும் இந்த துர்கா பூஜை மனித குலத்தின் அருவமான கலாச்சார பரம்பரியம் என்கின்ற பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த பட்டியலில் சேர்த்ததற்காக நன்றி தெரிவிக்கும் விதமாக செப்டம்பர் ஒன்றாம் தேதி கொல்கத்தாவில் பேரணி ஏற்பாடு செய்ய இருப்பதாக முதல்வர் கூறியுள்ளார்.

Categories

Tech |