மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர் பத்து பேரின் உயிரை காப்பாற்றிய 12 வயது சிறுமிக்கு வீரதீர விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு மும்பையில் பரேல் கிரிஸ்டல் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் தீ பிடித்தது. இந்த விபத்தை கண்ட ஜென் சடவர்டே என்ற 12 வயது சிறுமி தனது உயிரையும் பொருட்படுத்தாமல் எரியும் நெருப்பிற்குள் சென்று 10 பேரை காப்பாற்றினார்.
அவர் படிக்கும் பள்ளியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பின் போது கற்றுக்கொண்ட பாடங்களை நினைவில் வைத்து, தீயில் சிக்கிய மக்களை காப்பாற்றியதாக அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக 2019 ஆம் ஆண்டிற்கான வீர தீர செயலுக்கான விருது டெல்லியில் நடைபெற்ற விழாவில் ஜென் சடவர்டேக்கு வழங்கப்பட்டது