Categories
மாநில செய்திகள்

பத்திரிக்கையாளர்கள் கொலை…. 2022 -ல் மட்டும் இத்தனை பேரா…? வெளியான அதிர்ச்சி அறிக்கை…!!!!!!

பிராந்திய வாரியாக பிரஸ் எம்ப்ளம் பிரச்சாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்ட பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா  39 பேரும், ஐரோப்பாவில் 37 பேரும், ஆசியா 30 பேரும், ஆப்பிரிக்கா 7 பேரும் மற்றும் வட அமெரிக்காவில் 2 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். 1992 முதல் 1999 -ஆம் வருடம் வரை முன்னாள் யூகோஸ்லேவியாவில் நடைபெற்ற போர்களுக்கு பின் பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பில் ஐரோப்பா மிக மோசமாக இருப்பதாக கூறியுள்ளது.

பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 34 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதில் 8 பத்திரிக்கையாளர்கள் பணியில் இருக்கும் போது கொல்லப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மெக்சிகோ இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதாவது மெக்சிகோவில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வங்கதேசத்தில் ஹோண்டுராஸ், பாலஸ்தீனம், இஸ்ரேல் மற்றும் யேமன் போன்ற மூன்று ஊடகங்களில் தலா 3 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ ஜனநாயக குடியரசு, சிலி, கஜகஸ்தான், கென்யா, குவாத்தமாலா, ஸ்வீடன், துருக்கி, ரஷ்யா, பராகுவே மற்றும் வியட்நாம் போன்ற பகுதிகளில் தலா  ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது 45 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் உக்ரைனில் நடைபெற்ற போர் காரணமாக அதிக அளவிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பிரஸ் எம்பலம் தலைவர் பிளைஸ் லம்பன் அறிக்கையில் கூறியுள்ளார். கடந்த 2013 முதல் 2022 -ஆம் வருடம் வரை 1,135 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |