மெக்சிகோவில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த பத்திரிகையாளர் ஒருவர் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவில் வசித்து வரும் லூர்து மால்டனோடா என்பவர் அந்நாட்டில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் லூர்து தன்னுடைய சொந்த வாகனத்தில் ஒரு இடத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளார் அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் லூர்துவை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள்.
இதனால் சம்பவ இடத்திலேயே லூர்து பரிதாபமாக உயிரிழந்தது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 2 பத்திரிக்கையாளர்கள் துப்பாக்கியால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார்கள்.
இதற்கிடையே கடந்தாண்டில் மட்டும் மெக்சிகோவில் 7 பத்திரிக்கையாளர்கள் மர்மநபர்களால் துப்பாக்கியை கொண்டு சுட்டு தள்ளப்பட்டுள்ளார்கள்.