பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிதானத்தை இழந்து திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலைவாசி உயர்ந்து வருவதை கட்டுப்படுத்த சில விதிகளில் மாற்றம் செய்வதற்காக வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது” 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்து உள்ளது” என ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்தின் பத்திரிக்கையாளர் பீட்டர் டூசி கேள்வி எழுப்பினார்.
இதனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோபம் அடைந்தார். முணுமுணுத்தபடி அவர் பத்திரிக்கையாளரை திட்டும் பொழுது அங்குள்ள மைக்ரோ போன் மற்றும் காணொளியில் பதிவாகியதால், அங்குள்ள செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.