பட்ஜெட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
பொது பட்ஜெட் மக்களிடையே, அரசியல் அரங்கிலும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. உயர்கல்வித் துறைக்கு ரூ.5,568 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் பிடிஆர் அறிவித்திருந்தார். இதில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அறிவிப்பு என்பது அரசு பள்ளிகளில் படித்து விட்டு கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்பதாகும்.
அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் ரூபாய் ஆயிரம் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என மாணவிகள் திட்டங்களில் உதவித்தொகை பெற்று இருந்தாலும் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். மேலும் சில முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
அதேபோல் கோவை மெட்ரோ ரயிலுக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது. மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு நடைபெற்று வருகிறது. கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்டறிய பட இருக்கிறது என நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.