மாடுகளுக்கு தீனி போட சென்றபோது பாம்பு கடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள மண்கரடு பகுதியில் பிச்சை என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் அதிகாலையில் அவரது மாடுகளுக்கு தீனி போடுவதற்காக வீட்டிற்கு பின்னால் சென்றுள்ளார். அப்போது சோளத்தட்டை போரில் இருந்த பாம்பு எதிர்பாராத விதமாக முதியவரை கடித்துள்ளது.
இந்நிலையில் முதியவரின் அலறல் சத்தம் கேட்டு சென்ற அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் பலனின்றி முதியவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற எருமப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.