பதுக்கி வைத்து அதிக விலைக்கு மது விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கல்லங்குறிச்சி கிழக்குத் தெருவில் வசித்து வருபவர் ரமேஷ்(42). இவர் அப்பகுதியில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து அதிகமான விலைக்கு விற்றதாக தெரியவந்தது இதுதொடர்பாக கயர்லாபாத் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் காவல்துறையினர் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது ரமேஷை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.