Categories
தேசிய செய்திகள்

பதிலடி கொடுக்க இந்தியா தயார் – ராஜ்நாத்சிங் அதிரடி…!!

சீன இராணுவத்திற்கு எதிராக பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளதாக ராஜ்நாத்சிங் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே எல்லை குறித்து பிரச்சினை நடந்து வருகிறது. இந்நிலையில் லடாக் எல்லை குறித்து பிரச்சினை நிலவி வருகிறது. சீன அரசு லடாக் எல்லையை சொந்தம் கொண்டாடி வருகின்றது. எனவே சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் லடாக்கில் விவகாரத்தில் ஒரு இன்ச் கூட யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

எந்த மாதிரியான சோதனை வந்தாலும் அதற்கு பதிலடி கொடுக்க இந்திய தயாராக உள்ளது என தெரிவித்த அவர் எல்லையில் பதட்டத்தை தணிக்க சீனாவுடன் 9 சுற்று பேச்சுவார்த்தை செய்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |