அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது .
அமெரிக்காவின் 2020 ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டது உட்பட சைபர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப் போவதாக அமெரிக்கா செய்திகள் வெளியிட்டுள்ளது .அதில் 30 ரஷ்ய நிறுவனங்கள் மீதான பொருளாதாரத் தடையை விதிக்கப் போவதாகவும் தூதரக அதிகாரிகளுக்கும் தடை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வியாழக்கிழமை அன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரஷ்ய பணமான ரூபிள் மதிப்புள்ள பத்திரங்களை ஜூன் மாதத்திலிருந்து அமெரிக்க நிதி நிறுவனங்கள் வாங்குவதற்கு ஜோ பைடன் நிர்வாகம் தடை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.