Categories
மாநில செய்திகள்

பதவி நீக்கம் செய்ய உத்தரவிடலாமா….? ஷாக் கொடுத்த நீதிமன்றம்… அதிர்ச்சியில் ஊழியர்கள்….!!!!!!

ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவி நீக்கம் செய்ய உத்தரவிட லாமா என சென்னை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியது  அரசு ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் சிதம்பராபுரம் கிராம ஊராட்சி வார்டு மறுவரையறை செய்தபோது சிதம்பராபுரத்தில் உள்ள 84 வீடுகளை பிரித்து பழவூர் மற்றும் அவரைகுலம் பஞ்சாயத்தில் சேர்த்துள்ளனர். பழவூர் ஆவரைகுளம் பஞ்சாயத்தில் சேர்க்கப்பட்ட சிதம்பராபுரம் கிராமத்தில் உள்ள பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவும், சொத்துவரி வாங்கவும் அதற்கான ரசீதுகளை வழங்க மறுப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் வார்டு மறுவரையின் போது பழவூர், ஆவாரைகுளம்  பஞ்சாயத்துகளில் சேர்க்கப்பட்ட சிதம்பராபுரம் கிராமத்தில் உள்ள பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவும், சொத்துவரியை வசூலித்து ரசீதுகளை   வழங்கவும் உத்தரவிட வேண்டும் என சிதம்பரத்தைச் சேர்ந்த ஸ்டாலின் மற்றும் ஜெனிட்டா மனுவினை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், மற்றும் விஜயகுமார் அடங்கிய அமர்வு முன் ஏப்ரல் 8ஆம் தேதி விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது பழவூர், மற்றும் ஆவரைகுளம் பஞ்சாயத்து தலைவர்களும் மாவட்ட திட்ட அலுவலரும்  ஆஜராகி உள்ளனர்.

அவர்களிடம் நீதிபதிகள் கடந்த இரண்டு முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளீர்கள். ஏன் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் பதவி நீக்கம் செய்ய உத்தரவிடலாமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். தொடர்ந்து வார்டு மறுவரையறையின்போது சிதம்பரபுரம் பஞ்சாயத்தில் இருந்து பிரித்து பழவூர், ஆவரைகுளம் பஞ்சாயத்துகள் சேர்த்த குடியிருப்புகளுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து தருவதாகவும் முறையாக சொத்துக்களை வசூலிப்பதாகவும் பஞ்சாயத்து தலைவர்களை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நீதிபதிகள் வழக்கு ஏப்ரல் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Categories

Tech |