தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்/பள்ளி துணை ஆய்வாளர் மற்றும் அனையத பதவியிலிருந்து பணிமாறுதல் மூலம் கடந்த மார்ச் 7ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ள பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொண்டு முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் இன்று பிற்பகல் பணியிலிருந்து விடுவிக்குமாறு பள்ளிக் கல்வி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அவ்வாறு பணி விடுவிப்பு பெற்ற ஆசிரியர்கள் நாளை முற்பகல் பணியில் சேர வேண்டும் என சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Categories
பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வி ஆணையரகம் அதிரடி உத்தரவு….!!!!
