பதவி ஆசைக்காக சொந்த அண்ணனையே ஓரங்கட்டி அவர் ஸ்டாலின் என்று முதல்வர் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒரு கட்சியினர் மற்றொரு கட்சியை சாடி பேசி தங்களது தொகுதிகளில் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். தற்போதுள்ள ஆளுங்கட்சியான அதிமுகவை சேர்ந்த முதல்வர் எடப்பாடி திமுக ஆட்சியில் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்து வருகிறார்.
அந்நிலையில் பதவி ஆசையில் சொந்த அண்ணனே ஓரங்கட்டி அவர்தான் ஸ்டாலின் என்று திருச்சியில் பிரச்சாரத்தின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.