தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று வெற்றி வாகை சூடியது. இந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டனர். மு க ஸ்டாலின் பதவியேற்று நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என கூறியது ஒன்றும் புதிதல்ல என்று தெரிவித்த அவர், மக்களை ஏமாற்றி ஆட்சி அமைத்த திமுக, மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும், கல்வி கடன் ரத்து போன்ற திட்டங்களை குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடாமல் திமுக அரசு பின்வாங்குகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.