Categories
மாநில செய்திகள்

பதவிக்காக எதையும் செய்கின்ற ஒரே கட்சி திமுக தான்… முதலமைச்சர் பேச்சு..!!

பதவிக்காக எதையும் செய்கின்ற ஒரே கட்சி திமுக தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சேலத்தில் பிரச்சாரம் செய்துவரும் அவர் பேசியதாவது, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறும் திமுக தலைவர் காண்பது கனவு நாங்கள் பார்ப்பது நிஜம்.
நான் செய்யும் திட்டங்கள் எதுவும் திமுக தலைவர் ஸ்டாலின் கண்ணுக்கு தெரியவில்லை.

நாட்டு மக்களை திமுக மறந்தது. அதனால் மக்கள் திமுகவை மறந்து விட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதில் தந்திரவாதி. வீட்டில் இருந்தே பிரச்சினையை அரசு கவனத்திற்கு கொண்டு வந்தால் தீர்வு. தமிழகத்தில் விஞ்ஞான பூர்வமாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஊழலுக்கு சொந்தமானவர்கள் திமுகதான் 13 அமைச்சர் மீது ஊழல் புகார் உள்ளது இதை சந்திக்க திரணி இல்லாமல், வாய்தா வாங்கி கொண்டுள்ளனர். அதை மறைக்கவே திமுக தலைவர் எங்கள் மீது புகார் கூறி வருகிறார்.

எங்களிடம் சரக்கு உள்ளது அதனால் எங்களை மக்கள் நம்புகின்றனர். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நான் நிருபித்தபோது, எனது இருக்கைகளின் மீது ஏறி நடனமாடி ரகளையில் திமுக ஈடுபட்டார். பதவிக்காக எதையும் செய்கின்ற ஒரே கட்சி திமுக தான். இவ்வாறு அவர் சாடினார்.

Categories

Tech |