Categories
அரசியல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பண மாலையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அமமுக வேட்பாளர்….!!

மதுரையில் பழைய ஐந்து ரூபாய் நோட்டை மாலையாக அணிந்து வந்த வேட்பாளர் நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் வேட்பாளர்களை ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் அதிகளவில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 68-வது வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடுவதற்காக ஜாகிர் உசேன் பழைய ஐந்து ரூபாய் நோட்டுக்களை மாலையாக அணிந்து நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Categories

Tech |