உறவினரை பணத்திற்காக கொன்று உடலை துண்டாக்கி விலங்குகளுக்கு இரையாக்கிய நபரால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த டேனியல் வால்ஸ் (30). இவரது உறவினரான கிரஹாம் ஸ்நெல் என்பவரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் காவல்துறை விசாரிக்கும் முன்பே கடந்த வருடம் ஜூன் மாதத்தில் ஸ்நெல் என்பவரை வால்ஸ் கொலை செய்தார். மேலும் அவரது உடலை காரில் எடுத்துச் சென்று துண்டுகளாக வெட்டி பேட்ஜர் என்று கூறப்படும் ஒருவகையான விலங்கிற்கு இறையாக்கியுள்ளார்.
மீதமுள்ள உடல் பகுதிகளை குப்பை தொட்டியில் போட்டு மறைத்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரிக்கும்போது ஸ்நெல் மது போதையால் கழிவறையில் நிலை தடுமாறி விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் மோசடி செய்த பணத்தை விலையுயர்ந்த மதுவை அருந்தவும், போதை மருந்து பயன்படுத்தவும், சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கும் செலவு செய்துள்ளார். மேலும் நாட்டைவிட்டு அவசரமாக வெளியேறுவதற்காக கடவுச்சீட்டு பெற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.