இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி விளையாடும் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்..
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கிறது.. நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் என 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் மோதும்.. முதல் சுற்றில் விளையாடி முன்னிலை வகிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் வரும் அக்டோபர் 23ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மெல்போன் ஸ்டேடியத்தில் மோதுகின்றன.. இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி சர்வதேச கிரிக்கெட் அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் ஆடும் லெவனை அறிவித்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பான்..
இதில் தீபக் ஹூடாவைச் சேர்த்த அவர் ரிஷப் பண்டை தனது விளையாடும் XI-ல் இருந்து இர்ஃபான் நீக்கியுள்ளார். பண்டுக்கு பதில் தினேஷ் கார்த்திக்கை தேர்ந்தெடுத்துள்ளார்.. அர்ஷ்தீப் சிங் பதிலாக ஹர்ஷல் படேல் விளையாடும் லெவன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பதான் 5 பந்துவீச்சு விருப்பங்களுடன் செல்கிறார்.. ஹர்திக் பாண்டியா 5ஆவது பந்துவீச்சாளராகவும், தேவைப்பட்டால் தீபக் ஆஃப் ஸ்பின்னாகவும் இருக்கிறார்.
இதுகுறித்து இர்பான் பதான் ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறியதாவது, என் கருத்துப்படி, நீங்கள் முதல் போட்டியில் விளையாடுகிறீர்கள் என்றால், ஒரு சுழற்பந்து வீச்சாளர் உட்பட சில அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள் உங்களிடம் இருக்க வேண்டும். எனவே, மேலே இருந்து, நான் விளையாடும் 11ல் ஓப்பனிங் வீரராக ரோஹித், கே.எல். ராகுல், நம்பர் 3 – விராட் (கோலி). ), எண் 4 – சூர்யகுமார் யாதவ், எண் 5 – தீபக் ஹூடா, எண் 6 – ஹர்திக் பாண்டியா, எண் 7 – தினேஷ் கார்த்திக், எண் 8 வலது கை கால் சுழற்பந்து வீச்சாளராக இருப்பார், எனவே அது (யுஸ்வேந்திரா) சாஹல், 9 முதல் 11, இங்கே இருக்கும். ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் மற்றும் புவனேஷ்வர் குமாருக்கு நீங்கள் செல்லலாம்” என்று அணி அறிவிக்கப்பட்ட பிறகு பதான் கூறினார்.
இர்பான் பதான் தேர்வு செய்துள்ள இந்தியா விளையாடும் லெவன்:
ரோஹித் சர்மா (கே ), கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (WK), ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்
ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.