Categories
மாநில செய்திகள்

பண்டிகை காலம்…. சென்னையில் புதிய கட்டுப்பாடுகள்…. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னையில்  பண்டிகை விடுமுறை நாட்களில் வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றி கவனமாக இருக்கும்படி மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. வணிக வளாகங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து வழிகாட்டு நெறிமுறைகளின் படி குறைந்த எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம்  அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாநகாரட்சி தெரிவித்துள்ளது.

மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் கொரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

Categories

Tech |