‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்ற பண்டாரத்தி புராணம் பாடல் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனான வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது . சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. மேலும் இந்த படத்தின் ‘பண்டாரத்தி புராணம்’ பாடல் குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக இருந்து வருகிறது .
https://twitter.com/mari_selvaraj/status/1374963251050516482
மதுரை ஐகோர்ட்டில் இதுகுறித்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மாரி செல்வராஜ், தனுஷ் ஆகியோருக்கு மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் பண்டாரத்தி புராணம் பாடல் குறித்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவர இயக்குனர் மாரி செல்வராஜ் அதிரடி முடிவு ஒன்று எடுத்துள்ளார். அதில் அவர் ‘பண்டாரத்தி புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும், வருத்தத்தையும், கோரிக்கையும் முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என முடிவு செய்திருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்