Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பணி செய்ய விடாமல் தடுத்து…. சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய வியாபாரி…. போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய குற்றத்திற்காக லாட்டரி வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை மாரிமுத்து பிடித்து விசாரித்துள்ளார். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் என்பதும், சட்டவிரோதமாக அவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

இதனால் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசனை கைது செய்ய முயன்றுள்ளார். அப்போது முருகேசன் சப்-இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் பேசி பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |