Categories
தேசிய செய்திகள்

பணியிடங்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு இது இலவசம்….. மத்திய அரசு உத்தரவு….!!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பணியிடங்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்களில் தகுதிவாய்ந்த பணியாளர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை பூஸ்டர் டோசாக செலுத்த வகை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசாதி கா அம்ரித் மகாஉத்சவ் (சுதந்திர தின அமுத பெருவிழா) எனும் பெயரில் கொண்டாடுவதையொட்டி இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் ஆனவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக போடுவதற்கு கோவிட் தடுப்பூசி அமுத பெருவிழா என்ற திட்டத்தை ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரை மத்திய அரசு தொடங்கி இருப்பதும் இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |