Categories
தேசிய செய்திகள்

“பணியாளர் ஓய்வூதிய திட்டம்”… டபுளாகும் ஓய்வூதியம்…. இதோ முழு விபரம்….!!!!

பணியாளர் ஓய்வூதியத்திட்டத்தின் (இபிஎஸ்)முதலீட்டின் உச்ச வரம்பானது விரைவில் நீக்கப்படும். இதுகுறித்த விசாரணை தற்போது சுப்ரீம்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதுபற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது. இருப்பினும் இதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்..? இது உங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும்..? என்ற கேள்விகள் உங்களுக்குள் எழக்கூடும். இது ஊழியர்கள் அனைவருக்கும் குறிப்பிடத்தக்க மாற்றத்தினை ஏற்படுத்தும். அது என்ன என்பது பற்றி இந்த பதிவில் காணலாம். இப்போது ​​ஓய்வூதியத்துக்கான அதிகபட்சமான  சம்பளம் மாதம்15,000 ரூபாய் மட்டுமே ஆகும்.

அந்த வகையில் உங்கள் சம்பளம் என்னவாக இருந்தாலும் ஓய்வூதியத்தின் கணக்கீடு ரூபாய் 15,000ல் மட்டுமே செய்யப்படும். இந்த வரம்பை நீக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு  நடைபெற்று வருகிறது. ஊழியர்களின் ஓய்வூதியத்துக்கான வரம்பை 15,000 ரூபாயாக வரையறுக்க முடியாது என இந்திய யூனியன் மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தாக்கல் செய்த ஒரு தொகுதி மனுக்களின் விசாரணையை சென்ற வருடம் ஆகஸ்ட் 12ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இவ்வழக்குகளின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இபிஎஸ் குறித்த விதிகள்

நாம் வேலைசெய்யத் துவங்கி இபிஎஃப்-ல் உறுப்பினராகும்போது, ​​அதே சமயத்தில் இபிஎஸ்-லும் உறுப்பினராகிறோம். ஊழியர் தன் சம்பளத்தில் 12 சதவீதம் இபிஎஃப் இல் கொடுக்கிறார். இதற்கிடையில் அதே தொகையை அவரது நிறுவனமும் கொடுக்கிறது. எனினும் இந்த 8.33 சதவீதத்தில் ஒருபகுதி இபிஎஸ்- க்கும் செல்கிறது. மேலே குறிப்பிட்டுள்ளவாறு இப்போது அதிகபட்சம் ஓய்வூதியசம்பளம் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஆகும். அதாவது மாதந்தோறும் ஓய்வூதியபங்கு அதிகபட்சமாக (15,000ல் 8.33%) ரூ.1250 ஆக இருக்கும்.
ஊழியர் ஓய்வு பெற்றாலும் ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான அதிகபட்சமான சம்பளமானது ரூ.15 ஆயிரமாக மட்டுமே கருதப்படுகிறது. அதன்படி இபிஎஸ்-ன் கீழ் ஊழியர் ஒருவர் பெறும் அதிகபட்சமான ஓய்வூதியமானது ரூபாய் 7,500 ஆகும். நீங்கள் செப்டம்பர் 1 2014-க்கு முன்னதாக இபிஎஸ்- க்கு பங்களிக்கத் துவங்கி இருந்தால், உங்களுக்கான ஓய்வூதியம்பங்களிப்புக்கான அதிகபட்சம் மாத சம்பளவரம்பு ரூபாய் 6500 ஆக இருக்கும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். செப்டம்பர் 1 2014க்குப் பின் நீங்கள் இபிஎஸ்- ல் சேர்ந்து இருந்தால் அதிகபட்ச சம்பளவரம்பு 15,000 ஆக இருக்கும். தற்போது ஓய்வூதியமானது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.இபிஎஸ் கணக்கீட்டு சூத்திரம் என்ன?  

# மாதாந்திர ஓய்வூதியம் =(ஓய்வூதியம் பெறும் சம்பளம்Xஇபிஎஸ் பங்களிப்பு வழங்கப்பட்ட வருடங்கள்)/70

# இங்கே ஊழியர் செப்டம்பர் 1 2014-க்குப் பின் இபிஎஸ்- க்கு பங்களிப்பு செய்யத் துவங்குகிறார் என வைத்துக்கொள்வோம்.

# அவ்வாறு இருப்பின் ஓய்வூதிய பங்களிப்பானது ரூபாய்.15,000 ஆக இருக்கும்.

# அவர் 30 வருடங்கள் பணியாற்றினார் என வைத்துக்கொள்வோம்.

# மாதாந்திர ஓய்வூதியம் =15,000 X 30/70 = ரூபாய் 6428

இன்னும் ஒரு விஷயம் கவனத்தில்கொள்ள வேண்டியது என்னவெனில் பணியாளரின் 6 மாதங்கள் (அல்லது) அதற்கு மேற்பட்ட சேவை 1 வருடமாக கருதப்படும். அது குறைவாக இருப்பின் கணக்கிடப்படாது. அதன்படி பணியாளர் 14 வருடங்கள் 7 மாதங்கள் பணிபுரிந்து இருந்தால், அது 15 ஆண்டுகளாகக் கருதப்படும். எனினும் நீங்கள் 14 வருடங்கள் மற்றும் 5 மாதங்கள் பணிபுரிந்து இருப்பின் 14 ஆண்டு சேவை மட்டுமே கணக்கிடப்படும். இபிஎஸ்-ன் கீழ் குறைந்தபட்சம் ஓய்வூதியத்தொகை மாதம் 1000 ரூபாய் ஆகும். அதிகபட்சமான ஓய்வூதியமானது 7500 ரூபாய் ஆகும்.

ரூபாய் 8,571 ஓய்வூதியம் கிடைக்கும்

# 15,000 எனும் வரம்பு நீக்கப்பட்டு அடிப்படைச்சம்பளம் 20,000 ரூபாயாக இருப்பின் பார்முலாவின் அடிப்படையில் உங்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியமானது இப்படித்தான் இருக்கும்.
– (20,000 X 30)/70 = ரூ 8,571.

# ஓய்வூதியத்திற்கான (இபிஎஸ்) இப்போதைய நிபந்தனைகள்

# ஓய்வூதியத்திற்கு இபிஎப் உறுப்பினராக இருப்பது அவசியமாகும்.

# குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வழக்கமான பணியில் இருப்பது கட்டாயம் ஆகும்.

# ஊழியருக்கு 58 வயதாகும் போது ஓய்வூதியம் கிடைக்கும்.

# 50 வருடங்களுக்கும் பின்பும், 58 வயதிற்கு முன்னதாகவே ஓய்வூதியத்தை பெறுவதற்கு வசதியிருக்கிறது.

# முதல் ஓய்வூதியத்தைப் பெறும் போது குறைக்கப்பட்ட ஓய்வூதியத்தைப் பெறுவீர்கள். இதற்கென நீங்கள் படிவம் 10டியை நிரப்ப வேண்டும்.

# ஊழியர் இறந்தால் குடும்பத்துக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.

# சேவைவரலாறு 10 வருடங்களுக்கு குறைவாக இருப்பின் அவர்கள் 58 வயதில் ஓய்வூதியத்தொகையை திரும்பப் பெறுவதற்கான வசதியும் கிடைக்கும்.

Categories

Tech |