வீட்டு வேலைக்கு பணிப்பெண் வராததால் பணிப்பெண்ணின் 17 வயது மகளை வினோத முறையில் அவமானப்படுத்திய போலீசார் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி பகுதிக்கு அடுத்துள்ள நம்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் அதே பகுதியில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த முத்துமணி என்ற பணிப்பெண் இவரது வீட்டில் 6 மாதத்திற்கு முன்வேலை செய்துவந்தார். பணிப்பெண் முத்துமணிக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளது. இந்நிலையில் போலீசார் சுந்தரமூர்த்தியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் ,அந்தப் பணிப்பெண் அவரது வீட்டிற்கு சென்று வேலை செய்வதை நிறுத்திவிட்டார்.
இந்நிலையில் போலீசார் சுந்தரமூர்த்தி ,பணிப்பெண் முத்துமணியின் வீட்டிற்கு வந்து வேலை செய்யுமாறு பலமுறை அழைத்துள்ளார். இதற்கு முத்துமணி மறுப்புத் தெரிவிக்க ,சுந்தரமூர்த்தி கடும் ஆத்திரமடைந்தார். தன்னை மதிக்கவில்லை என்பதற்காக, முத்து மணியின் 17 வயது மகளை நூதன முறையில் அவமானப் படுத்தி உள்ளார். அந்த பதினேழு வயது பெண்ணிற்கு திருமணம் நடப்பதாக கூறி போலியான திருமண பத்திரிக்கை அடித்து ,அந்த பத்திரிக்கையின் அந்தப் பெண்ணின் பெயரை மணமகளாக குறிப்பிடும்,வேற ஒரு நபரை மணமகனாக குறிப்பிடும் அச்சடிக்கப்பட்டு ,அதை ஊர் முழுவதும் பத்திரிக்கையை கொடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி முத்துமணி வீட்டிற்குச் சென்று அவரிடம் ரகளையில் ஈடுபட்டு ,கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். அந்தப் பெண்ணின் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு போன்ற ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளார். இதனால் பணிப்பெண் முத்துமணி ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுமியை அவமானப்படுத்திய போலீசார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.