உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி இருக்கிறார். இந்த நிலையில் ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் ட்விட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். பல ஆய்வாளர்கள் ட்விட்டர் நிறுவனத்திற்கு எலான் மஸ்க் தற்போது செலுத்தும் விலை மிக அதிகம் என கூறியுள்ளனர். இந்த சூழலில் ஒப்பந்தம் முடிந்த உடன் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் தலைமை நீதி அதிகாரி நெட் செகல் பிட்டர் சட்ட மற்றும் கொள்கை நிர்வாகி விஜய காடே போன்ற உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
அதனை தொடர்ந்து பராக் மற்றும் நெட் செகல் போன்ற twitter நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்தை விட்டு வெளியேறி உள்ளனர். இனி அவர்கள் அங்கே திரும்ப மாட்டார்கள் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த சூழலில் twitter இணை நிறுவனர் பிஸ் ஸ்டோன் அமெரிக்காவாழ் இந்தியரான ட்விட்டர் முன்னாள் சி இ ஓ பராக் அகர்வால், நெட் செகல் மற்றும் விஜய் கார்டை போன்றோரின் ஒருங்கிணைந்த பங்களிப்பிற்காக நன்றி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில் கூறப்பட்டிருப்பதாவது ட்விட்டருக்காக நீங்கள் வழங்கிய ஒருங்கிணைந்த பங்களிப்புக்கு நன்றி நீங்கள் ஒவ்வொருவரும் அசாத்திய திறமைமிக்க அழகான மனிதர்கள் என பதிவிட்டு இருக்கிறார்.