தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் பணிக்காலத்தில் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் சேமநல நிதி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு மருத்துவர்கள் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதை ஏற்று தமிழக அரசு தற்போது ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு மருத்துவர்களின் ஊதியத்தில் மாதந்தோறும் 500 ரூபாய் பிடிக்கப்பட்டு வங்கியில் செலுத்தப்படும்.
பணிக்காலத்தில் உயிரிழக்கும் அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு இந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். இதை கண்காணிக்க ஊரக நலப்பணிகள் இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.