Categories
மாநில செய்திகள்

பணவீக்க விகிதம் 15.8% அதிகரிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!!!

நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் ஏப்ரலில் 15.08 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2021 ஏப்ரலில் 10.74 சதவீதமாக மொத்த விலை பணவீக்க விகிதம்  2022 ஏப்ரலில் 4. 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள், உணவில்லாத பொருட்கள், பெட்ரோல், எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உயர்வே  பண வீக்க  உயர்வுக்கு முக்கிய காரணம் மார்ச்சில் 8.1 ஆக உயர்ந்த உணவு பொருட்கள் மொத்த விலை குறியீட்டு எண் (0.17%உயர்வு) ஏப்ரலில்  8.88% அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட தரவுகளின்படி 8 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் சில்லரை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 7.75 சதவீதமாக அதிகரித்து இருக்கின்றது.இதனை  தொடர்ந்து நான்காவது மாதம் ரிசர்வ் வங்கியின் பணவீக்க உச்ச இலக்கான 6 சதவீதத்தை விட அதிகமாக இருக்கின்றது. மேலும் இந்தியாவில் தொடர்ந்து நான்காவது மாதம் அதிகரித்துவரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மே மாத தொடக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.40 சதவிகிதமும், ரொக்க கையிருப்பு விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில்  அடுத்த இரண்டு  நாணய கொள்கை கூட்டத்திலும் வட்டியை  உயர்த்தும்  என்று  எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |