Categories
உலக செய்திகள்

“பணவீக்கம் அதிகரிப்பு”…. இதை தவிர வேற வழி இல்ல…. பிரபல நாடு எடுத்த அதிரடி முடிவு….!!!!

இங்கிலாந்தில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.    

இங்கிலாந்தில் பணவீக்கம் அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பியாவின் மத்திய வங்கி வட்டி விகிதம் உள்ளிட்ட நாணய கொள்கைகளை மாற்றப் போவதில்லை என்று இங்கிலாந்து  முடிவு செய்துள்ளது. அதே  வகையில் பொருளாதார விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக வட்டி விகிதத்தை அதிகப்படுத்துவதற்கு இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

ஐரோப்பியாவின் மத்திய வங்கி முடிவு செய்வதற்கு முன்பு ஸ்விஸ் பிராங்க் மற்றும் அமெரிக்க டாலர் போன்றவைகளுக்கு நிகரான யூரோ மதிப்பு சமமானதாக இருந்தது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிறிந்தாலும் கூட ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரம் ஈர்க்கக்கூடிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஐரோப்பிய மத்திய வங்கி போல் இல்லாமல் இங்கிலாந்து வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இங்கிலாந்து வங்கியில் கடந்த  7 வாரங்களில் இரண்டாவது முறையாக  வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.

இங்கிலாந்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாதஅளவிற்கு பணவீக்கம் 5.4 சதவீதமாக உயர்ந்தது. உலகில் எரிவாயு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு எரிசக்தி விலை ஏப்ரல் மாதம் முதல் 50%  அதிகரிக்கும் என இங்கிலாந்து நாட்டின் எரிசக்தி ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது. இங்கிலாந்து நிதி மந்திரி நாட்டு மக்களின் அன்றாட செலவுகள் அதிகரித்து வருவதால் 9 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான நிதி திட்டத்தை அறிவித்துள்ளார்.

Categories

Tech |