நயன்தாரா விக்னேஷ்சிவன் கோவா சென்ற அதே நாளில் வனிதா குடும்பத்தினருடன் அங்கு சென்றது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
வனிதா கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ்-3 சீசனில் கலந்து கொண்டவர்.பிக்பாஸ் மட்டும் இல்லாமல் அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து சின்னத்திரையில் மூழ்கியிருந்தார் .கொரோனா ஊரடங்கு காலத்தில் வனிதா “விஷூவல் எபெக்ட்ஸ்” இயக்குநர் பீட்டர்பாலை திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தன்னைத் துரத்தும் சர்ச்சைகள் அனைத்துக்கும் துணிச்சலுடன் பதிலளித்தார் வனிதா விஜயகுமார்.
இந்நிலையில் வனிதா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் 40-வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக கோவா சென்றுள்ளார்.அங்கு சென்ற வனிதாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். வனிதா தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் . அதோடு கோவாவில் எடுக்கப்பட்ட அவரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனிடையே அதே நாளில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கொண்டாட கோவா பயணம் சென்றுள்ளனர்.ஒரேநாளில் நயன்தாரா மற்றும் வனிதா இருவரும் கோவா சென்றது ரசிகர்கள் மத்தியில் சர்சையை ஏற்படுத்தியது