Categories
சினிமா தமிழ் சினிமா

பணம் வசூல் பண்றாங்க….. பிரபல நடிகை மீது…. சினேகன் பரபரப்பு புகார்…..!!!!

கவிஞர் சினேகன் தனது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைதளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சினேகன், கூறியதாவது ” சில தினங்களுக்கு முன்பாக தன்னுடைய நண்பர்கள் தன்னுடைய அறக்கட்டளை பெயரில் சமூக வலைதள கணக்குகள் மூலம் பொது மக்களிடம் பணம் கேட்டு வருவதாக தெரிவித்தனர்.

அந்த சமூக வலைதளத்தை ஆராய்ந்த போது அதில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமியின் பெயர் இடம் பெற்றிருந்தது. இந்த விவகாரம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி தனது அறக்கட்டளையின் பெயருக்கு களங்கம் ஏற்படாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளேன்” என தெரிவித்தார்

Categories

Tech |