மும்பையில் நடிகை கெஹனா இளம்பெண்களை வைத்து ஆபாச படம் எடுத்து பணம் சம்பாதித்து வந்துள்ளார்
மும்பையில் தனி பங்களாவில் இளம்பெண்களை வைத்து நடிகை கெஹனா ஆபாச படங்கள் எடுத்துள்ளார். இளம்பெண்களை வைத்து ஆபாச படம் எடுத்து சம்பாதித்த நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவர் சினிமா வாய்ப்பு என்று கஷ்டப்பட்டு நடிகைகளிடம் சாதுரியமாகப் பேசி ஆபாச படங்கள் நடிக்க வைத்துள்ளார். அதைப்பார்க்க 2,000 ரூபாய் வரை கட்டணம் வசூல் வைத்துள்ளார்.
அவர்களுக்கு சம்பளமாக 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை கொடுத்து வந்துள்ளார். தற்போது வரை 87 ஆபாச படங்கள் எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பணம் சம்பாதிக்க இப்படி ஒரு வழியை நடிகை தேடியது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.