Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பணம் கொடுக்க முடியுமா? முடியாதா?… கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!!

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாபுதூர் பகுதியில் தாமரைச்செல்வன்(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் தீனதயாளன்(22) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் தாமரைசெல்வன் நின்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த தீனதயாளன் தாமரை செல்வனிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு என்னிடம் பணம் இல்லை என தாமரைச்செல்வன் கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த தீனதயாளன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். இதுகுறித்து தாமரைச்செல்வன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் தீனதயாளனை கைது செய்து அவரிடமிருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |