எதிர்மறையான விமர்சனங்களை கொடுத்து விடுவோம் என்று சொல்லி பணம் கேட்டு தயாரிப்பாளர்களை சில youtube விமர்சகர்கள் மிரட்டுகின்றனர் என பிரபல மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் “பணம் தரவில்லை எனில் எதிர்மறை விமர்சனங்களை youtube-யில் வெளியிட்டு விடுவதாக தயாரிப்பாளர்களை மிரட்டும், விமர்சகர்களை எனக்கு தெரியும்.
அதேபோல் ரூபாய் 2 லட்சம் வரையிலும் பணம் பெற்றுக் கொண்டு மோசமான படத்தை கூட டுவிட்டரில் நன்றாக இருக்கிறது என்று கருத்துக்களை பதிவிடும் விமர்சகர்களும் உண்டு. அவ்வாறு பணம் கேட்கும் youtube திரை விமர்சகர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.