தொழிலாளியின் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குஜிலியம்பாறை பகுதியில் கூலி தொழிலாளியான அம்மையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வங்கி கணக்கில் 53 ஆயிரம் ரூபாயை சேமித்து வைத்துள்ளார். இந்நிலையில் பணம் எடுப்பதற்காக அம்மையப்பன் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது வங்கி கணக்கில் பணம் இல்லை என வந்ததால் அம்மையப்பன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டும் சரியான தகவல் கிடைக்கவில்லை. எனவே அம்மையப்பன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.