தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பணமாலை அணிவிக்க வந்த கவுன்சிலரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை 133-வது வார்டில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் ஏழுமலை என்பவர் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதற்காக 20 ரூபாய் நோட்டுகள் தொடுக்கப்பட்ட 40,000 ரூபாய் மதிப்புள்ள பணமாலையுடன் சென்னை அறிவாலயத்திற்கு வந்துள்ளார்.