வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம், அருந்ததியர் தெருவில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி ரகு(40). இவர் விழுப்புரம் ஜானகிபுரம் சந்திப்பு அருகில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் ரகுவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். அதன்பின் அவரிடம் இருந்த ரூ2,000-த்தை பறித்து விட்டு தப்பித்து சென்று விட்டார்.
இதுகுறித்து ரகு விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் கண்டாச்சிபுரம் தாலுகா ஆயந்தூரில் வசித்து வந்த இசையாஸ் என்பவருடைய மகன் ஆபேஸ்பெர்னாண்டஸ்(24) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.