Categories
தேசிய செய்திகள்

பணத்துக்காக பெற்ற பிள்ளையை…. பெற்றோர் செய்த மோசமான செயல்…. பகீர் சம்பவம்…!!!

பெற்றோர் தனது சொந்த மகளை அனாதை என்று கூறி வியாபாரியிடம் பணம் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டம் அரிக்கோடு என்ற பகுதியை சேர்ந்த அப்துல் ஹாஜி (வயது 26). இவர் ஒரு வியாபாரி. கடந்த 6 மாதங்களுக்கு முன் இவர் சமூக வலைத்தளத்தில் தான் அனாதையாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இதனைப் பார்த்த திருவனந்தபுரத்தை சேர்ந்த பைஜு நசீர் மற்றும் அவரது மனைவி ராசிதா( 38) இருவரும் சேர்ந்து தனது 2வது மகள் போட்டோவை எடுத்துக்கொண்டு மலப்புறத்தில் உள்ள வியாபாரியை சந்திக்க சென்றனர்.

பின் அவரிடம் சென்றவர்கள் இந்தப் பெண் திருவனந்தபுரத்தில் உள்ள அனாதை இல்லத்தில் வசித்து வருவதாகவும், இவளை உங்களுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறோம் என்று தெரிவித்தனர். இதனையடுத்து வியாபாரி அந்த போட்டோவில் இருந்த பெண்ணை பார்த்தவுடன் பிடித்ததால், திருமணம் செய்து கொள்வதாக சம்மதம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டவுடன் தம்பதியினருக்கு ஒரே மகிழ்ச்சி, வியாபாரியிடம் உடனே முன்பணமாக 1 லட்சம் பெற்றுள்ளனர்.

மீண்டும் இரண்டு வாரம் கழித்து வியாபாரியை சந்தித்து பணம் கேட்டுள்ளனர். அவரும் 2 லட்சம் கொடுத்து இருக்கிறார்.அதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு மாதம் கழித்து வியாபாரியை சந்தித்து பெண் பார்க்க செல்லவேண்டும் என்று கூறி 3 லட்சம் பெற்றுள்ளனர். ஆனால் இதுவரையில் அவர்கள் பெண்ணை நேரில் காட்டவே இல்லை. இவ்வாறாக 11 லட்சம் வரை பல தவணைகளில் பணம் வாங்கிக்கொண்டு பெண்ணை மட்டும் காட்டாமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

இதனையடுத்து வியாபாரிக்கு இவர்கள் மேல் ஒரு சந்தேகம் எழுந்தது. பின் இது தொடர்பாக அரிக்கோடு போலீசில் இவர்கள் மீது புகார் ஒன்று கொடுத்தார்.போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அதாவது தம்பதிகள் காட்டிய போட்டோவில் உள்ள பெண், இவர்களுடைய சொந்த மகள் என்பதும் மற்றும் பணத்துக்காக தனது இரண்டாவது மகளை அனாதை என்று கூறி வியாபாரியிடம் பண மோசடி செய்தது தெரியவந்தது என போலீசார் தெரிவித்தார்.

Categories

Tech |