நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தின் ‘தமிழன் பாட்டு’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ஈஸ்வரன்’. இந்தப் படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ளார். இதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை வருகிற பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர் என்பதும் அதற்கான தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#THAMIZHANPATTU 🙏🏻#Eeswaranfirstsingle #Eeswaran #SilambarasanTR #Atman #STRhttps://t.co/te6UrvevUi pic.twitter.com/drARcKl6cR
— Silambarasan TR (@SilambarasanTR_) December 14, 2020
ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஈஸ்வரன் படத்தில் இடம்பெற்றுள்ள ‘தமிழன் பாட்டு ‘ பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. தற்போது சிம்பு ரசிகர்கள் இந்த பாடலை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர் .