அர்ஜென்டினாவில் சூறாவளி போல் காட்சியளித்த கொசுக்களின் கூட்டம் வாகன ஓட்டுநர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினா சாலையில் வாகன ஓட்டுநர்கள் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கையில், சூறாவளி போன்று ஒரு காட்சி தென்பட்டுள்ளது. இதனைக்கண்ட ஓட்டுநர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனையடுத்து அதன் அருகில் சென்றபோது அது கொசுக்கள் சேர்ந்து கூட்டமாக சூறாவளி போன்று காட்சியளித்தது தெரியவந்துள்ளது.
மேலும் இதுகுறித்து அர்ஜென்டினா ஆய்வக அறிவியலாளர் ஒருவர், இது கவலைப்படக்கூடிய விஷயம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதாவது பெரு மழையினால் ஏற்பட்ட வெள்ளம் பெருமளவில் தேங்கியிருப்பதால் அதிக கொசுக்கள் உற்பத்தியாகி இவ்வாறு ஏற்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும் இதனை பார்ப்பதற்கு பயங்கரமானதாக தெரிந்தாலும் மனிதர்களுக்கு அவற்றால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார். இதனை உடனடியாக அழிப்பதற்கான நடவடிக்கையை தற்போது மேற்கொள்ள தேவையில்லை. அவை 15 தினங்களில் தானாகவே உயிரிழந்து விடும் என்று தெரிவித்திருக்கிறார். அதே சமயத்தில் இவற்றால் பண்ணை வேலைகள் பாதிப்படையும் என்று கூறியுள்ளார்.