கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தெற்குதிட்டை ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகேயுள்ள தெற்குதிட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக ராஜேஸ்வரியும், துணைத் தலைவராக மோகன் என்பவரும் இருக்கின்றனர். இந்நிலையில் தெற்குதிட்டையில் ஜூலை-17-ம் தேதி நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தின்போது பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் தலைவர் ராஜேஸ்வரியை துணைத் தலைவர் மோகன் தரையில் உட்கார வைத்ததாக சமூக வலைதளங்களில் நேற்று புகைப்படம் வெளியானது.
இதை பற்றி புகார் எழுந்ததும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களுடன் விசாரணையை தொடங்கியுள்ளனர்.இதையொட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 17ஆம் தேதி எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகக் காரணமென்ன என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.