மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பெண் ஒருவர் இறந்த நிலையில் அவரது உடல் அருகே 18 மாத குழந்தை ஒன்று பட்டினியாக இரண்டு நாட்கள் கிடந்த சம்பவம் இதயத்தை நொருக்கும் விதமாக உள்ளது. கொரோனா அச்சம் காரணமாக யாரும் குழந்தையை தூக்க முன்வரவில்லை. அதன் பிறகு பெண் போலீசார் சுசீலா கபாலே மற்றும் ரேகா குழந்தைக்கு உணவளித்து மருத்துவமனையில் பாதுகாப்பாக சேர்த்தனர். மேலும் அந்தப் பெண் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Categories
பட்டினியாக 2 நாட்கள் கிடந்த 18 மாத குழந்தை…. இதயத்தை நொறுக்கும் செய்தி….!!!
