Categories
மாநில செய்திகள்

பட்டா வழங்க லஞ்சம்… வைரலான வீடியோ ஆதாரம்… கலெக்டர் அதிரடி உத்தரவு….!!!

நெல்லை மாவட்டம் பணகுடியில் வருவாய் ஆய்வாளராக ஜான்சி ராணி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சிஎஸ்எப் பிரிவில் பணியாற்றும் அவரது கணவருடன் செட்டிகுளம் டவுன் ஷிப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் துரைகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 4 பெண்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நத்தம் புறம்போக்கு நிலத்தில் பட்டா பெற்றிருந்தனர். தற்போது வரை நில அளவீடு செய்யாத காரணத்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து அந்தப் பெண்கள் மீண்டும் பட்டா கேட்டு வருவாய் ஆய்வாளர் ஜான்சியிடம் விண்ணப்பித்தனர். அதற்கு அவர் தலா ரூ.10,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதனை ஏற்றுக் கொண்டதாக கூறிய பெண்கள் முதல் தவணை ரூ.5,000 வீதம் ரூ.20,000 ஜான்சிராணியிடம் வழங்கியுள்ளனர். மீதமுள்ள தொகையை பட்டா பெறும் போது தருவதாகப் அப்பெண்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ காட்சி பார்த்த மாவட்ட கலெக்டர் விஷ்ணு வருவாய் ஆய்வாளர் ஜான்சிராணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |