தமிழகத்தில் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது திட்டங்களை விரைவுபடுத்த அரசு புறம்போக்கு நிலத்தை பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தனியார் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் அரசு நிலத்தை பெற்றுக் கொள்ளலாம். அதற்கு பதில், அந்த நிறுவனங்கள் வேறு பகுதியில் அதே அளவிலான இடத்தை அரசுக்கு பரிமாற்றம் செய்து கொடுக்க வேண்டும். பட்டாவானது நிலத்தின் விலை, அரசு வழிகாட்டுதல் மதிப்பு படி நிர்ணயம் செய்யப்படும். விண்ணப்பதாரர் பரிமாற்றம் செய்யப்படும் நிலத்தின் தெளிவான உரிமைகளுடன் மொத்த நிலத்தின் 30 சதவீத நிலத்தை மட்டும் விரிவாக்கப் பணிகளுக்காக பரிமாற்றம் செய்ய முடியும். இந்த புதிய உத்தரவின் மூலம் விரிவாக்க பணிகளை விரைவாக செய்ய முடியும் என தனியார் நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Categories
பட்டா பரிமாற்றம்…. தமிழகம் முழுவதும் அரசு திடீர் உத்தரவு….!!!!
