Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு கழிவுகளை எரித்த போது…. ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

பட்டாசு ஆலையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்துவிட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோவில் வீரர் பட்டியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பணியாளர்கள் வேலை முடிந்து சென்ற பிறகு வெளியே வைத்து பட்டாசு கழிவுகள் எரிக்கப்பட்டுள்ளது. அப்போது பட்டாசுகள் வெடித்து ஆலையின் உள்ளே கருந்திரி வைக்கப்பட்டிருந்த அறையில் விழுந்துவிட்டது. இதனால் அறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தண்ணீரை ஊற்றி அணைத்துவிட்டனர். பணியாளர்கள் வேலை முடிந்து சென்ற பிறகு தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |