கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாம்பல் பட்டியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறின.
ஊத்தங்கரை அடுத்த சாம்பல் பட்டி குன்னத்தூர் சாலையில் 20 ஆண்டுகளுக்கு மேல் கமல் பாஷா பட்டாசு கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் தற்போது தீபாவளி பண்டிகைக்காக சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுவகையிலான பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் பட்டாசு கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். வெடி விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.