பட்டாசு வெடித்து சோளதட்டைகளில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்துள்ளனர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் முனீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யும் பட்டாசுகளை அருகில் இருக்கும் இடத்தில் வெடித்து பார்ப்பது வழக்கம். அதேபோல் நேற்று ராக்கெட் பட்டாசை பணியாளர்கள் வெடித்துள்ளது . அப்போது திடீரென ராக்கெட் பட்டாசு அதே பகுதியை சேர்ந்த காமராஜர் என்பவரது தோட்டத்திற்குள் விழுந்து சோளத்தட்டைகளில் தீ பிடித்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து உள்ளனர். இதனால் அப்பகுதியில் நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.