முதலமைச்சர் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கியுள்ளார்.
சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் 104-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது. நமது இந்தியாவில் முதல் முதலாக தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் இந்த கல்லூரியும் ஒன்று. இதனால் முதல் மகளிர் கல்லூரி என்ற பெருமையும் ராணி மேரி கல்லூரிக்கு உள்ளது. இந்நிலையில் பட்டங்களை பெறுபவர்கள் பாடங்களை கற்பதிலிருந்து பாடங்களை உருவாக்கும் அளவுக்கு உயர வேண்டும்.
இந்நிலையில் பட்டம் பெரும் நாள் என்பது அனைவரின் வாழ்விலும் மிக முக்கியமான நாள். முதல் பட்டம் பெறுபவர்களுக்கு இது சிறப்பான நாள். இந்நிலையில் முதல் தலைமுறையாக பட்டம் பெறுவது அதனை காட்டிலும் பரவசமானது. உணர்ச்சி பூர்வமான மனநிலையில் தான் இன்று பட்டம் பெற்ற நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள். இதில் உங்களுடைய எதிர்கால கனவுகள் இருக்கிறது. மேலும் நீங்கள் இன்னும் உயர வேண்டும் என கூறியுள்ளார்.