தமிழகத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதில் குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த சில மாதங்களாகவே கொலை கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன.
அந்தவகையில், திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டரில் ரூபாய் 1.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. டிக்கெட் கவுண்டரில் பணிபுரிந்து வரும் டீக்காராம் மீனாவை கட்டிப்போட்டு பணத்தை கொள்ளையடித்த மர்ம கும்பல், கவுன்டரில் இருந்தவர்களை அறையில் அடைத்துப் பூட்டி போட்டுவிட்டு சென்றது. பின்னர் இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ரயில்வே டிஎஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையில் அமைக்கப்பட்ட 2 தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.