Categories
தேசிய செய்திகள்

பட்டப்பகலில் நடுரோட்டில்… பெண்ணிடம் துப்பாக்கியை காட்டி நகை கொள்ளை… வெளியான வீடியோ…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பட்டப்பகலில் ஒரு பெண்ணிடம் துப்பாக்கியை காட்டி நகையை பறித்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பட்டபகலில் பைக்கில் சென்ற பெண்ணிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஒரு பெண்மணி தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு திருப்பத்தில் மறைந்திருந்த கொள்ளையர்கள் அந்த வாகனத்தை மடக்கி பிடித்து துப்பாக்கியை காட்டி அந்த பெண்ணிடம் இருந்த தங்க நகையை பறித்துச் சென்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

Categories

Tech |