அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் மர்ம நபர் பட்டபகலில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் வாட்டர்டவுன் பகுதியில் கண்மூடித்தனமான இந்த தாக்குதல் மர்ம நபரால் நடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போது அந்த மர்ம நபர் வாகனம் ஒன்றில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்திருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் அவர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக பகல் 2 மணிக்கு அவசர உதவி குழுவினருக்கு தகவல் வந்துள்ளது. இதற்கிடையே சம்பவ இடத்தில் வசிக்கும் மக்களுக்கு காவல் துறையினர் அவசர எச்சரிக்கை விடுத்ததோடு, யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதையடுத்து திரளான காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த மர்ம நபரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.